பழனியாண்டவர் கோவிலில் சாமி வீதியுலா

திருவாரூர் கீழவீதி பழனியாண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது.

Update: 2022-10-26 18:45 GMT

திருவாரூர் கீழவீதி பழனியாண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவையொட்டி யாகசாலை பூஜையுடன், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் மாலை படிசட்ட வாகனத்தில் சாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து நேற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு முருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு பூத வாகனத்தில் சாமி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்