தங்க கேடயத்தில் சாமி வீதி உலா

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் தங்க கேடயத்தில் சாமி வீதி உலா நடந்தது.

Update: 2023-01-01 17:37 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மசாமி கோவிலில் கடந்த மாதம் 23-ந்் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கியது. தினசரி பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தோசித பெருமாள் மோகினி அலங்காரத்தில் தங்கக் கேடயத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சோளிங்கர் மற்றும் சுற்று பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்