திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2023-08-11 03:26 GMT

திருவண்ணாமலை,

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்க்கு நேற்று சென்றார். கவர்னரை கலெக்டர் முருகேஷ் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

தொடர்ந்து திருவண்ணாமலை கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சாதுக்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்ச்சியில் கவர்னர் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து கவர்னருக்கு சாதுக்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் சாதுக்களுக்கு கவர்னர் அன்னதானம் வழங்கினார்.

இந்த நிலையில், இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். கவர்னர் ஆர்.என். ரவிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கவர்னருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்