வெளிநாட்டை சேர்ந்த தம்பதியினர் சாமி தரிசனம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வெளிநாட்டை சேர்ந்த தம்பதியினர் சாமி தரிசனம்

Update: 2022-11-05 18:45 GMT

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஹிபன், அவரது மனைவி ஜனட் ஆகியோர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அவருக்கு 82-வயது பூர்த்தி அடைந்ததையொட்டி இந்து முறை படி ஆயுள் விருத்தி ஹோமம் செய்து வழிபட்டார். தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காளசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. அப்போது ராமலிங்க குருக்கள் வெளிநாட்டை சேர்ந்த தம்பதிக்கு பிரசாதம் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்