மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தாா்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் கருவறைக்கு சென்ற துர்கா ஸ்டாலின் பயபக்தியுடன் அம்மனையும், சிவபெருமானையும் தரிசனம் செய்தார். பின்பு உற்சவர் அம்மனை தரிசனம் செய்த அவர் சங்கு மகாமுனிவர் தவம் செய்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தார்.
தொடர்ந்து பெரியாயி அம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின் பகல் 12 மணியளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அப்போது செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், ஒன்றிய கவுன்சிலர் யசோதரை சந்திரகுப்தன் மற்றும் கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்.