நாட்டரசன்கோட்டை கோவிலில்சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் சாமி தரிசனம்

நாட்டரசன்கோட்டை கோவிலில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் சாமி தரிசனம் செய்தார்

Update: 2023-04-03 18:45 GMT

சிவகங்கை,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியம் நேற்று சிவகங்கை வந்தார். பின்பு அவர் நேற்று மாலையில் சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டையில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவரை கோவில் கண்காணிப்பாளர் சரவணன் கணேசன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். சாமி தரிசனம் முடிந்த பின்னர் அவர் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக சிவகங்கையில் உள்ள வேலுநாச்சியார்பட்டியில் சுப்ரீம் கோர்ட்டு நநீதிபதி ராமசுப்பிரமணியனை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்