சம்பா சாகுபடி பணி மும்முரம்

சீர்காழி பகுதியில் சம்பா சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-10-28 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி பகுதியில் சம்பா சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சம்பா சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். விவசாய பணிகள் செய்யக்கூடிய தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாலும், இடுபொருட்களின் விலை உயர்வினால் நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடி செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

நேரடி நெல் விதைப்பு

இந்த முறையில் செலவு குறைவாக உள்ளதால் நேரடி நெல் விதைப்பு முறையிலேயே விவசாயிகள் பெருமளவு ஈடுபட்டு வருகின்றனர். வைத்தீஸ்வரன் கோவில், மருவத்தூர், புங்கனூர், திருப்பன்கூர், வடபாதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக தங்கள் வயல்களில் களை எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கை தெளிப்பான் மூலம் களைக்கொல்லி மருந்து அடிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நெற்பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்