திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2023-01-14 11:28 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் கலெக்டர் அலுவலக அலுவலர்கள் சார்பில் சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வண்ணக் கோலங்கள் தீட்டப்பட்டு மலர்கள் மற்றும் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவில் புது பானையில் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் அவர் பாரம்பரிய முறைப்படி வேட்டி சட்டை அணிந்து வந்து துறை அலுவலர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். இதனையொட்டி அரசு அலுவலர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மி ராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.=========

Tags:    

மேலும் செய்திகள்