நாடியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து

நாடியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

Update: 2022-08-15 18:34 GMT

ஆலங்குடி:

ஆலங்குடியில் உள்ள நாடியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழச்சிக்கு புதுக்கோட்டை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரும், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட அலுவலருமான ரம்யாதேவி தலைமை தாங்கினார். ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி முன்னிலை வகித்தார். சமபந்தி விருந்தில் அரசு அதிகாரிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவு சாப்பிட்டனர். நிகழ்ச்சியில் ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு, கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ், புதுக்கோட்டை மாவட்ட சங்க தலைவரும், கிராம நிர்வாக அலுவலருமான லோகநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்