வாடிப்பட்டி பகுதியில் கடைகளில் உப்பு தர பரிசோதனை
வாடிப்பட்டி பகுதியில் கடைகளில் அதிகாரிகள் உப்பு தர பரிசோதனை செய்தனர்
வாடிப்பட்டி
வாடிப்பட்டி வட்டார கச்சை கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக உப்பு தர பரிசோதனை செய்யப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முனியசாமி தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், கிருஷ்ணன் ஆகியோர் வாடிப்பட்டி பகுதியில் உள்ள ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் உப்பு மற்றும் பலசரக்கு கடைகளில் விற்கப்படும் உப்பினை தர பரிசோதனை செய்தனர். இந்த சோதனையின் போது உப்பு பாக்கெட் மற்றும் மூடைகளில் இருந்த உப்புகள் அனைத்தும் ஆய்வு செய்து மாதிரி எடுக்கப்பட்டது.