தனியார் பஸ் மோதி உப்பு வியாபாரி சாவு
தனியார் பஸ் மோதி உப்பு வியாபாரி இறந்தார்.
உப்பிலியபுரம், செப்.11-
உப்பிலியபுரத்தை அடுத்த வெங்கடாசலபுரம் ஜெயஸ்ரீ நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 65). உப்பு வியாபாரியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் குல தெய்வ கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வெங்கடாசலபுரம் தனியார் பள்ளி அருகே, வந்த போது, தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முருகன் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.