அரசு பஸ் மோதி சலூன் கடைக்காரர் பலி

அரசு பஸ் மோதி சலூன் கடைக்காரர் பலியானார்.

Update: 2023-01-16 19:36 GMT


விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறில் சலூன் கடை வைத்திருந்தவர் வெற்றிவேல் பாண்டியன் (வயது 26). இவர் இரவு கடையை பூட்விட்டு சொந்த ஊரான கல்குறிச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே காரியாபட்டியிலிருந்து விருதுநகர் வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வெற்றிவேல் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி மல்லாங்கிணறு போலீசார் அரசு பஸ் டிரைவர் மல்லாங்கிணறை சேர்ந்த மகேஷ் குமார் (30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்