பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி பகுதியை சேர்ந்தவர் செய்யது இப்ராகிம் ஷா (வயது 38). இவர் கே.டி.சி. நகரில் உள்ள சங்கிலி பூதத்தான் (42) என்பவருடைய சலூன் கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது செய்யது இப்ராஹீம்ஷாவை, சங்கிலி பூதத்தான் அவதூறாக பேசி, அடித்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செய்யது இப்ராஹீம்ஷா தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பூதத்தானை நேற்று கைது செய்தார்.