சேலம் தாதகாப்பட்டியில் சலூன் கடை தொழிலாளி தவறி விழுந்து சாவு
சேலம் தாதகாப்பட்டியில் சலூன் கடை தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார்.
அன்னதானப்பட்டி
சேலம் தாதகாப்பட்டி கேட், மூணாங்கரடு, இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ரமேஷ் (வயது 28). சலூன் கடை தொழிலாளி. இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் தாதகாப்பட்டி மூணாங்கரடு பாண்டுரங்கநாதர் கோவில் அடிவாரத்தில் படிக்கட்டில் உட்கார்ந்த நிலையில் ரமேஷ் முகத்தில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் போதையில் படிக்கட்டில் இறங்கி வரும் போது தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. எனினும், அவரது முகத்தில் காயங்கள் இருந்ததால்அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.