சலூன் கடை உரிமையாளர் தற்கொலை

கம்பத்தில் சலூன் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-25 18:45 GMT

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சுந்தராஜ் (வயது 39). சலூன் கடை உரிமையாளர். இவரது மனைவி கவிதா. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கவிதா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்றார். இதனால் சுந்தரராஜ் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் இவர், கடந்த 23-ந்தேதி கம்பத்தில் உள்ள சலூன் கடைக்கு சென்றார். மாலை வரை அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அங்கு தேடி சென்றார்.

அப்போது சலூன் கடையில் உள்ள மின்விசிறியில் சுந்தரராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடினார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்