பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம

கடையநல்லூரில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.

Update: 2023-01-12 18:45 GMT

கடையநல்லூர்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்றைய தினம் கடையநல்லூரில் பொங்கல் பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்தது.

கடையநல்லூர் தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பகல் நேரங்களில் ஆட்டோ மற்றும் கனரக வாகனங்கள் தினசரி மார்க்கெட் பகுதிகளுக்கு செல்வதற்கு போலீசார் கயிறுகளை கட்டி தடை விதித்தனர்.

இந்த ஆண்டு கடையநல்லூர் தினசரி மார்க்கெட்டில் 15 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது


Tags:    

மேலும் செய்திகள்