நெல் குத்த பயன்படும் உரல்கள் விற்பனை தீவிரம்

வடகாடு பகுதியில் நெல் குத்த பயன்படும் உரல்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-11-03 18:18 GMT

பாரம்பரிய உபகரணம்

வடகாடு மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் சுமார் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வீடு தவறாமல் இருந்து வந்த உரல், உலக்கை, ஆட்டுக்கல், அம்மி உள்ளிட்டவைகள் தமிழர்களின் பாரம்பரிய உபகரணமாக கருதப்படுகிறது. இவைகள் தற்போது பெரும்பாலான வீடுகளில் இல்லை என்பதால் உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய அடைப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்கள் தற்சமயம் கிராமப்புற பகுதிகளிலும் அதிக அளவில் பரவி கிடக்கிறது.

விற்பனை தீவிரமாக...

இதனால் எண்ணற்ற மக்கள் பல்வேறு வகைகளில் துன்பப்பட்டு வருகின்றனர். தற்போது இப்பகுதிகளில் ஒரு சிலர் மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வேன்களின் மூலமாக, உரல், உலக்கை, ஆட்டுக்கல், அம்மி போன்ற பாரம்பரிய கைவினை பொருட்களை தாங்களே தேர்ந்தெடுக்கப்பட்ட மரங்கள் மற்றும் பாறைகளை கொண்டு உற்பத்தி செய்து கிராமப்புற பகுதிகளில் தீவிரமாக விற்பனை செய்து வருகின்றனர்.

உரல் ரூ.2,500-க்கு விற்பனை

அந்த வகையில் வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியான மதுக்கூர் பகுதியில் இருந்து நாவல் மரத்தில் இருந்து செய்யப்பட்டதாக கூறி வியாபாரி ஒருவர் உரல்களை மோட்டார் சைக்கிளில் வைத்து விற்பனை செய்து வருகிறார். ஒரு உரல் ரூ.2,500 ‌வரை விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்