சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் இடமாற்றம்

சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2023-07-26 20:40 GMT

சேலம் கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பாபு சுரேஷ்குமார். இவர் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு பதவி உயர்வு பெற்று சமீபத்தில் இன்ஸ்பெக்டர்களாக பல்வேறு இடங்களில் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு நேற்று புதிதாக பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதாவது, காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் கே.பாபு சுரேஷ்குமார், சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், வேலூர் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் எழில் சுரேஷ் சிங், ராமநாதபுரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கும், குமரேஷ் கோவைக்கும், தனலட்சுமி, சிவகங்கைக்கும், தேவி, விழுப்புரத்திற்கும், புஷ்பா சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சென்னை குற்றப்பிரிவு கூடுதல் ஏ.டி.ஜி.பி.மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்