4½ மாதங்களாக பணிக்கு வராத சேலம் சிறை வார்டர் பணிநீக்கம்
4½ மாதங்களாக பணிக்கு வராத சேலம் மத்திய சிறை வார்டரை பணிநீக்கம் செய்து சூப்பிரண்டு தமிழ்செல்வன் உத்தரவிட்டார்.
சிறை வார்டர்
சேலம் மத்திய சிறையில் வீராணம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 27) என்பவர் 2017-ம் ஆண்டு முதல் சிறை வார்டராக பணியாற்றி வந்தார். இவர் உயர் அதிகாரி களிடம் தகவல் தெரிவிக்காமல் அடிக்கடி பணிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல் கடந்த 4½ மாதங்களாக சீனிவாசன் பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. பணிக்கு உடனடியாக வருமாறு சிறை நிர்வாகம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.
பணி நீக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினர். இந்த நிலையில் சிறை வார்டர் சீனிவாசன் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கான உத்தரவை சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் பிறப்பித்தார்.