சேலம்: சாலையோர மரத்தில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது - தாய், மகன் பலி

சேலம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தாய்-மகன் உயிரிழந்தனர்.

Update: 2022-08-12 07:37 GMT

சேலம்,

சேலம் அம்மாப்பேட்டை ஈ.பி காலனி பின்புறம் உள்ள பெருமாள் கோவில் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 55),இவரது மனைவி மீனாட்சி (48) இவரது மகன் அருண் (28) இவர் தனியார் ஐ.டி கம்பெனி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கீர்த்திகா(20).

இவர்கள் நான்கு பேரும் ஒரு காரில் நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு சேலம் திரும்பினார். அப்போது இன்று அதிகாலை மல்லூர் பிரிவு ரோடு அருகே வந்தபோது கார் நிலை தடுமாறி ரோட்டோரத்தில் நின்ற மரத்தில் மோதி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி அருண், மீனாட்சி இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கந்தசாமி, கீர்த்திகா இருவரையும் அப்பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது விபத்து குறித்து மல்லூர் போலீசார் இன்ஸ்பெக்டர் கலையரசி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்