15 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

வேலூரில் 15 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.;

Update:2023-07-11 21:58 IST

வேலூரில் 15 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

விலை உயர்வு

தமிழகத்தில் தக்காளி விலை உயர்வு காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வீடுகளில் தக்காளிகளை குறைந்த அளவே வாங்குகின்றனர்.

தக்காளி விலை உயர்வை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே தக்காளிகளை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி வேலூர் மாநகராட்சில் முதற்கட்டமாக 15 ரேஷன் கடைகளில் இன்று முதல் விற்பனை தொடங்கப்பட்டது.

மாநகராட்சில் உள்ள 68 கடைகளில் கழிஞ்சூர், விருப்பாட்சிபுரம், பாகாயம், தாராபடவேடு, காங்கேயநல்லூர், சேண்பாக்கம், அல்லாபுரம், ஆர்.என்.பாளையம், கஸ்பா உள்ளிட்ட 15 கடைகளில் நேற்று விற்பனை செய்யப்பட்டது.

ரூ.70-க்கு விற்பனை

இதற்காக ஆந்திர மாநிலம் பலமநேரில் இருந்து 500 கிலோ தக்காளி கொள்முதல் செய்யப்பட்டது. ஒவ்வொரு கடைக்கும் 40 கிலோ முதல் 50 கிலோ வரை வழங்கப்பட்டிருந்தது.

கடைகளில் ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு கிலோ வீதம் பொதுமக்களுக்கு ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதை ஏராளமானவர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

பல கடைகளில் விற்பனை தொடங்கிய சில மணிநேரங்களிலேயே அனைத்து தக்காளிகளும் விற்பனையானது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் தக்காளி விலையை குறைக்க அரசு ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக வேலூர் மாநகராட்சியில் 15 கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை உயர்ந்தால் பிற கடைகளில் விற்பனை செய்ய அரசின் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்