கல்வி நிறுவனங்களுக்கு அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனை - காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

கல்வி நிறுவனங்களுக்கு அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-06-25 19:09 GMT

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் போதைப்பொருள் விழிப்புணர்வு மணற்சிற்ப கண்காட்சியை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், போதைப் பொருட்களின் விற்பனை சமீப காலங்களாக அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 168 வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், எச்சரிக்கையை மீறி புகையிலைப் பொருட்களை விற்றால் கடைகள் சீல் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்