திண்டிவனத்தில் பாக்கெட் சாராயம் விற்பனை - ஒருவர் கைது
திண்டிவனத்தில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆட்சிப் பக்கம் பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஒலக்கூர் சப்- இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆட்சிப் பக்கம் குளக்கரை அருகில் புதுச்சேரி சாராய பாக்கெட்டுகளை வைத்து இருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிரம்மதேசம் கீழ்மண்னூர் கிராமம் பகுதியைச் சேர்ந்த வீரராகவன் மகன் ராஜி (வயது31) என்பது தெரியவந்தது. பின்னர், அவரை கைது செய்த போலீசார், 150 பாக்கெட் சாராயங்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று ஆட்சிப் பாக்கம் சுடுகாடுபகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது மோட்டார் சைக்கிளில் பாக்கெட் சாராங்களை விற்பனை செய்தவர் தப்பியோடினார். போலீசார் விசாரணையில் அவர், ஆட்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமு(40) என்பது தெரியவந்தது. தற்போது அவரை போலீசார் தேடி வருகின்றனர்.