தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை
தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனையை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய 2 தலைமை தபால் நிலையங்கள் மற்றும் 52 துணை தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசியகொடி விற்பனையை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறும்போது, தபால் நிலையங்களில் மொத்தமாகவும், சில்லரையாகவும் இந்திய தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து தபால் நிலையங்களிலும் நேரடியாகவும், indiapost.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்து தேசிய கொடியை பெறலாம். மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய கொடி விற்பனை அலுவலர் சதீஷ், (செல்போன்-7373579527), ஆயுள் காப்பீட்டு வளர்ச்சி அலுவலர்-9626043450 ஆகியோரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.