குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை: ஒரே வாரத்தில் 143 பேர் கைது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போலீசார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை,
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போலீசார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தல் தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் 143 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 493 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 62.2 கிலோ மாவா, ரூ.4 ஆயிரம் பணம், 2 மோட்டார் சைக் கிள் மற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.