தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை
தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை நாளை (திங்கட்கிழமை) முதல் நடக்கிறது.
நெல்லை:
இந்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடுகிறது. நாளை (திங்கட்கிழமை) முதல் 24-ந்தேதி வரை தங்க பத்திர விற்பனை நடைபெற உள்ளது. தனிநபர் ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும்போது அன்றுள்ள விலைக்கு நிகராக பணமும் பெறலாம்.
இதற்குரிய விண்ணப்பம், பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றை கொண்டு தங்க பத்திரத்தை அனைத்து தபால் நிலையங்களிலும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவலை நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் தெரிவித்துள்ளார்.