கம்பத்தில் கஞ்சா விற்பனை: கண் பார்வையற்ற முதியவர் கைது

கம்பத்தில் கஞ்சா விற்ற கண் பார்வையற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2022-07-12 12:53 GMT

கம்பம் உலகத்தேவர் தெருவில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ராமர் (வயது 62) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான ராமர் கண் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்