போலி ஆவணம் கொடுத்து ரூ.4¼ லட்சத்துக்கு கார் விற்பனை-போலீசார் விசாரணை
போலி ஆவணம் கொடுத்து ரூ.4¼ லட்சத்துக்கு கார் விற்பனை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 30). இவர் ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து கோரிமேடு பகுதியை சேர்ந்த சுதன் என்பவரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்துக்கு கார் வாங்கினார். காருக்கான ஆவணங்களையும் சுதன் கொடுத்துள்ளார். இதற்கிடையில் காமேஷ் என்பவர் சுரேஷ்குமார் வீட்டுக்கு சென்று நீங்கள் வாங்கிய கார் தனக்கு சொந்தமானது என்று கூறி அதை எடுத்து சென்று விட்டார்.
இதையடுத்து போலி ஆவணங்களை கொடுத்து தன்னிடம் சுதன், காரை ஏமாற்றி விற்றதை அறிந்த சுரேஷ்குமார் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சுதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.