மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாற்று இடம் வழங்கக்கோரி சாலை மறியல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாற்று இடம் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

Update: 2022-10-14 20:33 GMT

பவானி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாற்று இடம் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

சாலை மறியல்

பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பலத்தமழை பெய்தது. பவானியை அடுத்த தொட்டிபாளையம் பழைய காலனி மற்றும் பனங்காடு காலனி பகுதியில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் நேற்று தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரியும், அதுவரை மழை தண்ணீர் சூழாதவாறு பாதுகாப்பு வசதிகளை செய்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து பவானி அந்தியூர் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

பேச்சுவார்த்தை

சாலை மறியல் குறித்து தகவல் கிடைத்ததும் பவானி தாசில்தார் ரவி, பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், தொட்டிபாளையம் ஊராட்சி தலைவர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் சவீதா சுரேஷ், ஆண்டி குளம் ஊராட்சி தலைவர் பத்மா விசுவநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்களின் கோரிக்கைக்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தார்கள். அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்