வள்ளியூர் பெருமாள் கோவிலில்சகஸ்ர தீப வழிபாடு
வள்ளியூர் பெருமாள் கோவிலில்சகஸ்ர தீப வழிபாடு நடந்தது.
வள்ளியூர்:
வள்ளியூர் ஊருக்கு மத்தியில் சுந்தரபரிபூரண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், உலக அமைதிக்காகவும், உலக நன்மைக்காகவும் இந்த கோவிலில் 2008 சகஸ்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அர்ச்சகர் ரிஷி பட்டாச்சாரியார் தீபம் ஏற்ற ஏராளமான பெண்கள் மற்றும் பெருமாள் பக்தர்கள் ஏராளமானோர் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இதில் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.