புனித சவேரியர் ஆலய பெருவிழா

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் புனித சவேரியர் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Update: 2022-11-26 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் நாப்பாளையத் தெருவில் புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டுப்பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டு 148-ம் ஆண்டுப்பெருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உசுட்டேரி ஏசுநசரேன் கொடி பவனியை தொடங்கி வைத்து திருப்பலி நடத்தினார். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் காலையில் திருப்பலி நிகழ்ச்சியும், மாலையில் தேர் பவனியும், விழாவின் முக்கிய நிகழ்வாக 3-ந் தேதி பெருவிழா கூட்டுப்பாடல் திருப்பலி, ஆடம்பர தேர் பவனியும் நடக்கிறது. இவ்விழாவில் புதுச்சேரி- கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ்கலிஸ்ட் கலந்துகொள்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்