புனித சுவக்கீன் அன்னாள் ஆலய சப்பரபவனி
தொண்டி அருகே புனித சுவக்கீன் அன்னாள் ஆலய சப்பரபவனி நடந்தது
தொண்டி,
திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள குருமிலாங்குடி புனித சுவக்கீன் அன்னாள் ஆலய 101-ம் ஆண்டு திருவிழா கடந்த 11-ந் தேதி பங்குத்தந்தை ஜேம்ஸ் ராஜா தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நவநாள் திருப்பலியும் மாதா மன்றாட்டு நிகழ்ச்சிகளும் ஜெப வழிபாடும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை ஆர்.எஸ். மங்கலம் மறை வட்ட அதிபர் தேவ சகாயம் தலைமையில் பங்குத்தந்தை ஜேம்ஸ் ராஜா மற்றும் அருட்தந்தையர்கள் நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனித சுவக்கீன் அன்னாள், புனித பாத்திமா மேரி ,புனித மிக்கேல் அதிதூதர் ஆகியோர் வீதி உலா வந்து இறை மக்களுக்கு இறை ஆசீர் வழங்கினர்