புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி

உடையார்பாளையம் அருகே புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி நடைபெற்றது.

Update: 2023-05-01 18:55 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சூசையப்பர் பட்டணம் கிராமத்தில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் மாலை 6 மணியளவில் சிறிய தேர் பவனி நடந்தது. 29-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு சிறிய தேர் பவனியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கூட்டு பாடற்திருப்பலி மற்றும் புனித சூசையப்பருக்கு ஆடம்பர தேர்பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்