புனித சவேரியார் ஆலய சப்பர பவனி
ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலய சப்பர பவனி நடைபெற்றது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடந்த விழாவில் காலையில் திருப்பலி, மாலையில் மாலை ஆராதனை நடைபெற்றது. நேற்று காலையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி மணப்பாடு மறை வட்ட தலைமை குரு ஜான் செல்வம் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஆறுமுகநேரி பங்கு தந்தை அலாய்சியஸ் அடிகளார், சேர்ந்தபூமங்கலம் பங்கு தந்தை செல்வன் அடிகளார், அடைக்கலாபுரம் பங்கு தந்தை பீட்டர் பால் அடிகளார் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலையில் மாலை ஆராதனையும், புனித சவேரியார் சுருபம் தாங்கிய கப்பல் சப்பர பவனியும் நடைபெற்றது. இதில் திரளான இறை மக்கள் கலந்து கொண்டனர்.