புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா
சேர்ந்தபூமங்கலம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நடைபெற்றது.
ஆறுமுகநேரி:
ஆத்தூரை அடுத்துள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அமலிபுரம் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் அடிகளார் தலைமையில், உடன்குடி பங்குத்தந்த விக்டர் லோபோ அடிகளார், சேர்ந்தபூ மங்கள பங்குத்தந்தை செல்வம் அடிகளார், ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர்.
தொடர்ந்து 10 நாட்கள் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை நவதனால் திருப்பலி மறையுறை நற்கருணை ஆசீர் நடைபெற்றது. 9-ம் திருவிழா அன்று தூத்துக்குடி புனித தோமையார் பள்ளி பங்குத்தந்தை ராயப்பன அடிகளார், கருத்தபிள்ளையூர் பங்குத்தந்தை விசுவாசம் அடிகளார், ஆகியோர் திருவிழா மாலை ஆராதனையை நிறைவேற்றினர்.
திருவிழாவில் சிகர நாளான நேற்று காலையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி மற்றும் சிறுவர் சிறுமியர் புது நன்மை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. புனித மிக்கேல் அதிதூதரின் சப்பர பவனி ஊரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.