தூய யோவான் ஆலய திருவிழா கொடியேற்றம்
தூய யோவான் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;
சுரண்டை:
வாடியூர் தூய யோவான் ஆலயத்தின் 110-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்காசி வட்டார கத்தோலிக்க சபை அதிபர் போஸ்கோ குணசீலன், அம்பை வட்டார கத்தோலிக்க சபை அதிபர் அருள் அந்தோணி, அம்பை பங்குத்தந்தை அருள் அம்புரோஸ் ஆகியோர் தலைமை தாங்கி கொடியேற்றினர். தொடர்ந்து மறையுரை, சிறப்பு திருப்பலி நடந்தது.
முன்னதாக ஊர் பெரியவர்கள் மற்றும் நிர்வாகிகள் வாடியூர் பங்குத்தந்தை லியோவிற்கு மாலை மரியாதை உடன் சிறப்பு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தூய மிக்கேல் அதிதூதர், தூய அருளப்பர் திருஉருவச் சிலை ஏந்திய அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் ஆலய பெருவிழாவில், தினமும் மாலையில் நற்செய்தி பெருவிழா, கலை விழா, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. வருகிற 1-ந் தேதி மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி, சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சிகர நிகழ்ச்சியான தேர் பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை வாடியூர் பங்குத்தந்தை லியோ தலைமையில், கட்டளைதாரர், தர்மகர்த்தா மற்றும் அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், ஊர் நிர்வாகிகள் மற்றும் இறை மக்கள் இணைந்து செய்துள்ளனர்.