ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலில் சகஸ்ர தீபம்

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலில் சகஸ்ர தீப வழிபாடு நடந்தது.;

Update: 2022-11-20 21:14 GMT

கார்த்திகை மாதத்தில் விளக்குகள் ஏற்றி வழிபடுவது ஐதீகம். குறிப்பாக வைணவ கோவில்களில் இம்மாதத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபடும் சகஸ்ரதீப வழிபாடு நடைபெறும். இதனால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான காட்டழகிய சிங்கர் கோவிலில் நேற்று மாலை சகஸ்ரதீப வழிபாடு நடந்தது.

சகஸ்ர தீபத்தையொட்டி கோவில் மண்டபங்கள், பிரகாரங்கள், நந்தவனம் உள்பட கோவில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை ஆயிரக்கணக்கான விளக்குகளை பக்தர்கள் ஏற்றி வைத்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில் நாதஸ்வர இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்