அரசு கலைக்கல்லூரியில் சாலை பாதுகாப்பு கருத்தரங்கம்
அரசு கலைக்கல்லூரியில் சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
கரூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று யூத் ரெட் கிராஸ் சார்பில் சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். யூத் ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமணசிங் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தன், பசுபதிபாளையம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும்.அதிவேகமாக வாகனங்களில் செல்ல கூடாது. சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது என மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.