சென்னை நட்சத்திர ஓட்டலில் பாதுகாப்பு தலைமை பண்புகள் பயிற்சி நிகழ்ச்சி
சென்னை நட்சத்திர ஓட்டலில் பாதுகாப்பு தலைமை பண்புகள் பயிற்சி நிகழ்ச்சி அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது
தேசிய பாதுகாப்பு கவுன்சில் தமிழக பிரிவின் சென்னை துணை குழு சார்பில், மூத்த நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு தலைமை பண்புகள் தொடர்பான நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை தாங்கினார்.
பாதுகாப்பு தலைமை பண்புகள் தொடர்பாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் நசிமுத்தீன், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் தமிழ்நாடு பிரிவு தலைவருமான எம்.வி.செந்தில்குமார் ஆகியோர் பேசினார்கள். இதைத்தொடர்ந்து பயிற்சி நடைபெற்றது.
இதில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் தமிழ்நாடு பிரிவு பொருளாளர் ஜே.ஜெகநாதன், இணை செயலாளர் ஜி.சுபாஷ், பல்வேறு தனியார் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.