தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

அனக்காவூர் ஒன்றியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஒ,ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்.;

Update: 2022-06-03 17:57 GMT

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 148 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.19.13 லட்சத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல், பண்ணைக்குட்டையை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 34 கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாராட்டுச் சான்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சிறப்பு விருந்தினராக ஓ.ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்று அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளில் பணியாற்றி வரும் 148 தூய்மைப் பணியாளர்களுக்கு தலா ஒருவருக்கு சுமார் ரூ.19 ஆயிரம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள், களப் பணிக்கான தளவாட பொருட்கள் அடங்கிய 17 விதமான பொருட்கள், அனக்காவூர் ஒன்றியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைத்து சிறப்பாக செயல்படுத்திய 34 ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பாராட்டி பேசினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் ராஜ்குமார், சீனுவாசன், ரவிக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ஹரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்