கூட்டுறவு வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக வசதி

கூட்டுறவு வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக வசதி அமைக்கப்படும் என்று மத்திய அரசின் கூட்டுறவுதுறை இணைசெயலாளர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார்.

Update: 2023-02-14 18:45 GMT

கூட்டுறவு வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக வசதி அமைக்கப்படும் என்று மத்திய அரசின் கூட்டுறவுதுறை இணைசெயலாளர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலை வகித்தார். மத்திய அரசின் கூட்டுறவுத்துறை நிர்வாக இயக்குனர் மற்றும் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக இணை செயலாளர் பங்கஜ்குமார் பன்சால் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 131 கூட்டுறவு விற்பனை சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மத்திய கூட்டுறவு துறை இணைசெயலாளர் பங்கஜ்குமார் பன்சால் கூறியதாவது:-

ஒவ்வொரு கூட்டுறவு வங்கியின் கீழ் 10-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெட்ரோல் பங்க், உரம் விற்பனை நிலையம், இ-சேவை மையம் போன்றவை நடத்தப்படுகிறது. கூட்டுறவு வங்கியின் மூலம் தனிநபர் கடனுதவி, நகை கடன், விவசாய கடன் வழங்கப்படுகிறது.

பாதுகாப்பு பெட்டக வசதி

ரேஷன் கடைகளில் மளிகை பொருள்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்களுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யவும், வேளாண் கருவிகள் வாடகைக்கு விடவும், வேளாண் விளைபொருளை இருப்பு வைக்க சேமிப்பு கிடங்கு கட்டி வாடகைக்கு விடவும் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக வசதி அமைத்து வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, கூட்டுறவு வளர்ச்சி கழக முதன்மை இயக்குனர் சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் மனோகரன், இணை பதிவாளர் முத்துக்குமார், பொதுமேலாளர் கருணாகரன், சரக துணை பதிவாளர் சுப்பையா, உதவி பொது மேலாளர்கள், சரக மேலாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்