மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.;
சோளிங்கர்
மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கோட்ட மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் சோளிங்கரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காவேரிப்பாக்கம் உதவி செயற்பொறியாளர் துரைசங்கர் தலைமை தாங்கினார். சோளிங்கர் உதவி பொறியாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். காவேரிப்பாக்கம் உதவி பொறியாளர் ரமேஷ் வரவேற்றார்.
கூட்டத்தில் பணியின்போது மின் ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பணியின் போது தேவையான உபகரணங்கள் எடுத்து செல்ல வேண்டும், பணியின் போது பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், கவனத்துடன் பணிபுரிய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
இதில் உதவி பொறியாளர்கள், வேலு, செண்பகப்பிரியா, ரமேஷ்குமார், ஜெயபாரதி, வேலூர் வட்ட சேம குழு உறுப்பினர்கள் தருமன், சேட்டு மற்றும் கோட்ட களப்பணியாளர்கள், மின் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.