'ரத்தன் டாடாவின் மறைவு வேதனையளிக்கிறது' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ரத்தன் டாடாவின் மறைவு வேதனையளிக்கிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-09 20:41 GMT

சென்னை,

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-

"ரத்தன் டாடாவின் மறைவு வேதனையளிக்கிறது. அவர் இந்திய தொழில்துறையின் உண்மையான பலமாகவும், பணிவு மற்றும் இரக்கத்தின் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தார்.

அவரது தொலைநோக்கு தலைமை டாடா குழுமத்தை வடிவமைத்தது மட்டுமல்லாமல், வணிக நெறிமுறைகளுக்கான உலகளாவிய அளவுகோலையும் அமைத்தது. தேசத்தைக் கட்டியெழுப்புதல், கண்டுபிடிப்புகள் மற்றும் தொண்டு ஆகியவற்றில் அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் அழியாத முத்திரையை பதித்துள்ளது.

இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டது. ஆனால் ரத்தன் டாடா விட்டுச்சென்ற மரபுகள் எதிர்வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்