கணவர் பலி; பெண் படுகாயம்

ராஜபாளையம் அருகே லாரி மீது கார் மோதலில் கணவர் பலியானார். பெண் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-10-07 18:48 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ராஜபாளையத்தை அடுத்துள்ள ஜமீன்கொல்லன்கொண்டான் ஊரைச் சேர்ந்தவர் கதிரேச பாண்டியன் (வயது 56). இவரது மனைவி ராமலட்சுமி (51). இவர்கள் 2 பேரும் தங்களது காரில் மதுரைக்கு சென்று விட்டு ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

கிருஷ்ணன்கோவில் அருகே வந்த போது எதிரே வந்த லாரி-கார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கதிரேச பாண்டியன் பலியானார், படுகாயம் அடைந்த ராமலட்சுமி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்