நூற்றுக்கணக்கான ஆடுகளை பலியிட்டு கறிவிருந்து

2 ேகாவில்களில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான ஆடுகளை பலியிட்டு கறி விருந்து தடபுடலாக நடைபெற்றது.

Update: 2022-06-04 20:28 GMT

செக்கானூரணி, 

2 ேகாவில்களில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான ஆடுகளை பலியிட்டு கறி விருந்து தடபுடலாக நடைபெற்றது.

வினோத திருவிழா

மதுரை செக்கானூரணி அருகே சொரிக்காம்பட்டி கிராமத்தில் கரும்பாறை முத்தையா கோவில் அமைந்துள்ளது. அங்கு பல ஆண்டுகளுக்கு மேலாக ஆண்கள் மட்டுமே பங்குபெறும் வினோத திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 200-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் ஆட்டு இறைச்சியை சமைத்து கருப்பசாமிக்கு படையலிட்டு வணங்கினர்.

இதையடுத்து நேற்று காலையில் கறிவிருந்து தடபுடலாக நடந்தது. ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டு கறி விருந்தை ருசித்து சாப்பிட்டு சென்றனர். சொரிக்காம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி கிராம பொதுமக்கள் இணைந்து நடத்திய இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

காவனூர்

இளையான்குடி அருகே உள்ள காவனூர் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் காளியம்மன் கோவிலில் குலதெய்வத்தை ஆண்கள் மட்டுமே கூடி வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான இந்த விழா, நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கியது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்று காளி அம்மனை வழிபட்டனர். மானாவாரி விவசாயிகளின் பயிர்களை பாதுகாக்கவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும் வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடனை பக்தர்கள் நிறைவேற்றினர். .

கறி விருந்து

பின்னர் கமகமக்க கறி விருந்து சமைக்கப்பட்டது. தொடர்ந்து ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு கறி விருந்தை ரசித்து சாப்பிட்டனர். இந்த விழாவின்போது, சாப்பிட்ட பின்பு இலையை எடுப்பதில்லை. அவை காய்ந்த பின்பு கிராம பெண்கள்தான் இலையை எடுப்பார்கள். இந்த திருவிழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர். இதே ஊரில் மு்த்துமாரியம்மனுக்கு ஆடி மாதம் நடக்கும் திருவிழாவின்போது, பெண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என அக்கிராமத்தினர் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்