லாரி மோதி தொழிலாளி பலி

ஓசூரில் லாரி மோதி தொழிலாளி இறந்தார்.

Update: 2023-05-03 18:45 GMT

ஓசூர்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே ஈச்சம்பாடி கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜாகிருஷ்ணன் (வயது 36). கூலித் தொழிலாளி. கடந்த 1-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஓசூர்- பாகலூர் சாலையில் உளியாளம் பஸ் நிறுத்தம் அருகில் சென்றார். அந்த வழியாக வந்த லாரி, ராஜாகிருஷ்ணன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த பாகலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜாகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்