மின்சாரம் தாக்கி விசைத்தறி உரிமையாளர் பலி
நாமகிரிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி விசைத்தறி உரிமையாளர் இறந்தார்.
நாமகிரிப்பேட்டை
நாமகிரிப்பேட்டை அடுத்த வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அர்த்தநாரீஸ்வரன் (வயது 40). இவர் சொந்தமாக தறி தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று அர்த்தநாரீஸ்வரன் விசைத்தறியில் பட்டு நூலில் சேலை தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அர்த்தநாரீஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.