அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்ய நாட்டினர் ஆயுள் விருத்தி ஹோமம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்ய நாட்டினர் ஆயுள் விருத்தி ஹோமம் செய்து வழிபட்டனர்.;

Update: 2023-09-23 18:45 GMT

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலுக்கு தினந்தோறும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த 17 பேர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் இந்து முறை படி ஆயுள் விருத்தி ஹோமம் செய்து வழிபட்டனர். இதனை மகேஷ் குருக்கள் செய்து வைத்தார். தொடர்ந்து கோவிலுக்கு சென்று முதலில் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காளசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், பூஜைகள் செய்தும் வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்