கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அதன் தலைவர் தாஸ் தலைமை தாங்கினார். கோட்ட செயலர் மதியழகன் வரவேற்று பேசினார். இதில் கோட்ட பொருளாளர் ஞானபிரகாசம், கிளை பொருளாளர் ரவிச்சந்திரன், மகிலா கமிட்டி தலைவர் ஜெயசூர்யா, முன்னாள் கோட்ட செயலர் மருதசாமி மற்றும் நிர்வாகிகள் ஊமத்துரை, பிரியதர்ஷினி உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், கிராமிய அஞ்சல் ஊழியர்களின் மனஉளைச்சலை அதிகரிக்கும் விதமாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பதை கைவிட வேண்டும். அலுவலக நேரம் முடிந்து ஊர், ஊராக சுற்றி புதிய கணக்கு, சேமிப்பு கணக்கு தொடங்க நெருக்கடி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். முடிவில் கிளை செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.