நகரத்தைவிட கிராம வாழ்க்கையே சிறந்தது-கவர்னர் ஆர்.என். ரவி பேச்சு

நகரத்தைவிட கிராம வாழ்க்கையே சிறந்தது என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.

Update: 2022-06-18 16:18 GMT

"நகரத்தைவிட கிராம வாழ்க்கையே சிறந்தது" என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.

கவர்னர் வருகை

தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறையில் சோகோ தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி. நேற்று மாலை 5 மணிக்கு வந்தார். அவரை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மென்பொருள் நிறுவன நிர்வாக இயக்குனர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

அந்த நிறுவனத்தை கவர்னர் பார்வையிட்டார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசும்போது கூறியதாவது:-

கிராமத்து வாழ்க்கை

கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி நிறுவனங்கள் செல்லும் நிலையில் நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கி வந்துள்ள இந்த சோகோ நிறுவனம் கிராமப்புற மாணவ- மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

பொதுவாக கிராமங்களில் கலாசாரம், பண்பாடு இவை இன்றும் காணப்படுகின்றது. நகரங்களில் அடுத்த வீட்டில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவுக்கு இருக்கிறார்கள். ஆனால் கிராமங்களில் அப்படி அல்ல நகரங்களை விட கிராமத்து மக்கள் கலாசாரத்தோடு வாழ்கிறார்கள். நகர வாழ்க்கையை விட கிராம வாழ்க்கையே சிறந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

கவர்னரின் வருகையை முன்னிட்டு அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Tags:    

மேலும் செய்திகள்